L76 to L100

#76.
கடா = ஆண் விலங்கு.
கடா = வினாவு.

#77.
கடு = கசப்பு.
கடு = நோவெடு.

#78.
கடுகு = தாளிக்கும் தானியம்.
கடுகு = விரைந்து செல்வாய்.

#79.
கடை = எல்லை.
கடை = கடைதல் செய்வாய்.

#80.
கண்டி = ருத்திராக்க மாலை.
கண்டி = கடிந்து கொள்ளுவாய்

#81.
கணி = சோதிடன்.
கணி = கணக்கிடுவாய்.

#82.
கதிர் = ஒளிக் கிரணம்.
கதிர் = ஒளிவீசுவாய்.

#83.
கருக்கு = கூர்மை.
கருக்கு = கருகச் செய்வாய்.

#84.
கரை = நீர்நிலையின் எல்லை.
கரை = கரைத்து விடு.

#85.
கலை = பகுதி.
கலை = கலைத்து விடுவாய்.

#86.
கவர் = பிறயும் கிளை.
கவர் = கவர்ந்து செல்லுவாய்.

#87.
கவி = கவிஞன்.
கவி = மூடி வளைத்துக் கொள்ளுவாய்.

#88.
கழல் = சிலம்பு.
கழல் = நெகிழ்ந்து விடு.

#89.
கழற்று = கடுமையான அறிவுரை.
கழற்று = அவிழ்த்துவிடு.

#90.
கழி = கோல்.
கழி = கழித்து விடு.

#91.
களை = அழகு.
களை = சோர்வடை.

#92.
களை = மதுபானம்.
களை = களை எடுப்பாய்.

#93.
களை = புல் பூண்டு.
களை = பிடுங்கி எறிவாய்.

#94.
கறி = இறைச்சி.
கறி = நன்கு கடித்து உண்பாய்.

#95.
கறு = தீராத சினம்.
கறு = கருமையாக ஆக்கு.

#96.
கன்று = இளம் விலங்கு.
கன்று = சினம் கொள்ளுவாய்.

#97.
கனல் = நெருப்பு.
கனல் = சினம் கொள்ளுவாய்.

#98.
கனி = பழம்.
கனி = மனம் இளகுவாய்.

#99.
கா = சோலை.
கா = பாதுகாத்து வருவாய்.

#100.
காண் = காட்சி.
காண் = அனுபவத்தால் அறிவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *