# 101.
காய் = மரத்தில் காய்ப்பது.
காய் = உலர்வது.
# 102.
கால் = 1/4 என்னும் பின்னம்.
கால் = தோன்றச் செய்.
# 103.
கிடை = இருப்பிடம்.
கிடை = அடையப் பெறு.
# 104.
கிழி = பணமுடிப்பு.
கிழி = துண்டாக்கு.
# 105.
கிளை = மரக் கப்பு.
கிளை = பெருக்கம் அடைவாய்.
# 106.
கீழ் = கிழக்கு.
கீழ் = கிழித்துவிடு.
# 107.
குடை = கவிகை.
குடை = துளைத்து விடு.
# 108.
குமை = துன்பம்.
குமை = குழப்பம் அடை.
# 109.
குலவு = வளைவு.
குலவு = நெருங்கி உறவாடு.
# 110.
குலை = கொத்து.
குலை = தாறுமாறாக்கி விடு.
# 111.
குழம்பு = உண்ணும் திரவம்.
குழம்பு = மனம் கலங்கு.
# 112.
குழல் = துளை உள்ள ஒரு பொருள்.
குழல் = சுருட்டி முடி.
# 113.
குழை = இலையும், தளிரும்.
குழை = இளம் பதம் ஆக்கு.
# 114.
குறை = குற்றம்.
குறை = சிறிதாக்கி விடு.
# 115.
குன்று = சிறிய மலை
குன்று = நிலை கெடு.
# 116.
கூட்டு = நட்பு.
கூட்டு = இணைத்து விடு.
# 117.
கூடு = பறவைக் கூடு.
கூடு = பொருந்து.
# 118.
கூறு = பிரிவு.
கூறு = சொல்லு.
# 119.
கெடு = தவணை.
கெடு = பழுதாக்கி விடு.
# 120.
கொல் = வருத்தம்.
கொல் = அழித்து விடு.
# 121.
கொழு = உலோகக்கோல்.
கொழு = செழிப்புறு.
# 122.
கொழுந்து = இளம் தளிர்.
கொழுந்து = தீயில் காய்ச்சப்படு.
# 123.
கொள் = ஒரு தானியம்.
கொள் = பெற்றுக்கொள்.
# 124.
கோடி = நூறு லக்ஷம்.
கோடி = அலங்காரம் செய்.
# 125.
கோடு = கொம்பு.
கோடு = நெறி தவறு.