L151 to L175

# 151.
சூடு = வெப்பம்.
சூடு = அணிந்து கொள்.

# 152.
சூர் = தெய்வ மகளிர்.
சூர் = பயமுறுத்து.

# 153.
சூழ் = ஆலோசனை.
சூழ் = சுற்றிக்கொள்.

# 154.
செய் = வயல்.
செய் = இயற்று.

# 155.
சேதி = செய்தி.
சேதி = வெட்டிவிடு.

# 156.
சேர் = எட்டுப் பல எடை.
சேர் = கலந்துவிடு.

# 157.
சொல் = மொழி.
சொல் = வாயால் பேசு.

# 158.
சொலி = மரப்பட்டை.
சொலி = ஒளி விடுவாய்.

# 159.
ஜோடி = இரட்டை.
ஜோடி = அலங்காரம் செய்.

# 160.
சோதி = ஒளி.
சோதி = பரீட்சை செய்.

# 161.
தக்கு = தந்திரம்.
தக்கு = நிலைபெறு.

# 162.
தகர் = ஆண் யானை / ஆடு / சுறாமீன்.
தகர் = அடித்து நொறுக்கு.

# 163.
தகை = பொருத்தம்.
தகை = தடுத்து விடு.

#164.
தடி = கொள்.
தடி = பருமனாகிவிடு.

# 165.
தண்டி = பருமன்.
தண்டி = தண்டனை அளி.

# 166.
தண்டு = கதாயுதம்.
தண்டு = வசூல் செய்.

# 167.
தத்து = ஆபத்து.
தத்து = தாவிச்செல்.

# 168.
ததர் = கொத்து.
ததர் = நொறுக்கிவிடு.

# 169.
தப்பு = தவறு / குற்றம்.
தப்பு = ஆபத்திலிருந்து நீங்கி விடு.

# 170.
தம்பி = இளைய சகோதரன்.
தம்பி = சிலை போல ஆகிவிடு.

# 171.
தமி = தனிமை.
தமி = தனியன் ஆகிவிடு.

# 172.
தருக்கு = கர்வம்.
தருக்கு = செருக்கு அடைவாய்.

# 173.
தலை = சிரம்.
தலை = மேன்மையாகு.

# 174.
தவ = மிகவும்.
தவ = நீங்கி விடு.

# 175.
தழை = இலை.
தழை = செழிப்பாக வளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *