M. நவரசச் சொற்கள்.

மனிதனின் வாழ்வில் ஒன்பது சுவைகள் உலா வரும்.

இனிக்கும் சிருங்காரச் சுவையிலிருந்து தொடங்கி

அச்சம், வீரம், கோபம், அற்புதம் என்று பலவகைப்படும்!

இச்சுவைகளை இனிய தமிழில் வெளிப்படுத்த இயலும்

ஒற்றை எழுத்துச் சொல்லின் மூலம் அழகாக நம்மால்!

கற்றவரை இவை நிலவவில்லை வேற்று மொழிகளிலே!

1. அ ஆ => இரக்கக் குறிப்பு.

2. அக்காடா => களைப்பு.

3. அப்பாடா => களைப்பு, சோர்வு.

4. அச்சோ => பதற்றம், இரக்கம்.

5. அட => மகிழ்ச்சி கலந்த வியப்பு.

6. அடேயப்பா => மிக மிக வியப்பு.

7. அந்தோ => கழிவிரக்கம்.

8. அப்பப்பா => வியப்பு, இரக்கம்.

9. அம்மா => வலி, அதிர்ச்சி, பயம், வியப்பு.

10. அம்மம்மா => வியப்பு, களைப்பு, சலிப்பு.

11. அம்மாடி => வியப்பு, ஒப்பு, இரக்கம்.

12. அன்னோ => வருத்தம்,இரக்கம்.

13. ஆ=> இகழ்ச்சி, வினா, வலி.

14. ஆகா => சம்மதம், வியப்பு.

15. ஆத்தாடி => வியப்பு, அதிசயம்.

16. ஆம் => அனுமதி.

17 . ஆமாம் => சம்மதம்.

18 .இதோ => சுட்டுவது.

19 .இந்தா => கொடுப்பது.

20 . எல்லே => இரக்கக் குறிப்பு.

21. ஏலே => (இளையவனை) விளிப்பது.

22 . எலா => (நண்பனை) விளிப்பது.

23 . என்னே… வியப்பு, கழிவிரக்கம்.

24. ஏ => விளித்தல், இகழ்தல்.

25. ஏடா => (தோழனை) விளிப்பது

26. ஏடி => (தோழியை) விளிப்பது.

27. ஐ => வியப்பு, மகிழ்ச்சி.

28. ஐயகோ => இரக்கம், மிகுந்த துயரம்.

29. ஐயோ = > இரக்கம், துயரம், வியப்பு.

30. ஓ => உயர்வு, ஒப்பு, இழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, விளித்தல்.

31. ஓகோ => வியப்பு, வினா.

32. சிச்சீ/ சீ சீ => இகழ்ச்சி.

33. சீ => வெட்கம், நாணம்.

34. சூ = > வெறுப்பு, விரட்டுதல்.

35. சே => மிகவும் வெறுப்பு, இழிவு.

36. சேச்சே => மிகவும் இழிவு.

37. சை => இகழ்ச்சி, வெறுப்பு.

38. சோ => கனமழை.

39. ஞை ஞை => அழுகை.

40. நை நை => தொந்திரவு.

41. தூ => மிகுந்த வெறுப்பு, இழிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *