சித்திரம் ஒன்று நமக்கு வெளிப்படுத்தும்
விசித்திரமான ஆயிரம் சொற்பொருளை!
கண் முன்னே படம் பிடித்துக் காட்டும் இவை!
காமிராவின் வேலையைச் செய்யும் இவை!
இணைச் சொற்களா அன்றி அடுக்குத்தொடரா?
இரட்டைக் கிளவியா? என அறியத் தேவை இல்லை.
அற்புதமான இவற்றைப் பயன்படுத்தி நம்முடைய
கற்பனை வளத்தைக் கூட்டலாமே எழுத்துக்களில்!