ஒலிக் குறிப்பு

1. கண கண = மணியோசை.

2. ஜண ஜண = பேரிகையின் ஒலி.

3. கர கர = முறுக்கு, சீடை.

4. மொறு மொறு = வடை, அடை.

5. சர சர = பாம்பு.

6. கொள கொள = குழாயில் நீர் கொட்டுவது.

7. சல சல = நீரோடை.

8. லொட லொட = ஓயாமல்.

9. கட கட = உருளும் ஓசை.

10. தட தட = ஓடும் ஓசை.

11. பட பட = வெடிக்கும் ஓசை.

12. சடச் சட= மரம் முறிதல்.

13. சொடச் சொட = பொரியும் ஓசை.

14. மொகு மொகு = எதிரொலி.

15. மொச்சு மொச்சு = அசை போசுதல்

16. முசு முசு = கண்ணீர் விடுதல்.

17. க்ளுக் = வாய்விட்டுச் சிரித்தல்.

18. லொடக் லொடக் = மறை கழன்றது.

19. கடுக் கடுக் = பல்லைப்பதம் பார்க்கும்.

20. வெடுக் வெடுக் = கடிக்கும் ஓசை.

21. கீச் கீச் = பறவை ஒலி.

22. க்ரீச் க்ரீச் = எலியின் ஒலி.

23. கல கல = குதூகலம்.

24. பொல பொல = உதிர்வது.

25. சள சள = பேச்சு ஒலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *