#31. The differences?
தன்னம்பிக்கை = “என்னால் முடியும்” என்ற எண்ணம்.
தற்பெருமை = “என்னாலும் முடியும்” என்ற பெருமிதம்.
கர்வம் = “என்னால் மட்டும் தான் முடியும்” என்ற எண்ணம்.
# 32. வேகத்தடை!
“பனை உருளை பனை உருளை
பனை அடி நடு நுனி உருளை.”
வேகமாகப் பலமுறை சொல்லிப் பாருங்கள்.
வேகத்தடை வருகின்றதா இல்லையா என்று!
இதன் பொருள் என்ன என்று சிந்தித்திருந்தால்
முன்னமேயே தெரிந்திருக்குமோ என்னவோ?
காலம் கனிந்தது இன்று தான்!
கருத்துப் புரிந்ததும் இன்று தான்!
பனை மரம் உருண்டையாக இருக்கின்றது.
இது எல்லோருமே அறிந்த உண்மையே!
பனையின் அடியும் உருண்டை,
பனையின் நடுவும் உருண்டை,
பனையின் நுனியும் உருண்டை.
பயன் என்னவோ இதனால்?
பனையால் நேராக விழவும் முடியும் ( topple down)
பனையால் உருண்டு வரவும் முடியும் (roll down )
பனையால் புரண்டு வரவும் முடியும் (tumble down )
பனை எப்படி வந்தாலுமே அழிவுகள்
பலவற்றை அதனால் ஏற்படுத்த முடியும்.
பனை மரத்தின் கீழே நின்று
பாலைக் குடிக்காதே என்று
மறை மொழிகள் பகர்வதின்
மறை பொருள் இதுதானோ?
#33.