#46. இது எப்படி இருக்கு?
அப்பா தினமும் கோவிலுக்குப் போகச் சொல்கின்றார் என்று
வேறு மதப் பெண்ணை காதல் கல்யாணம் செய்துகொண்டான்!
அங்கோ நாளைக்கு ஐந்து முறை தொழுகைக்கு
அழைப்பு வந்த வண்ணம் இருந்தது!
From the frying pan into the fire
என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதா???
#47. “அப்படி என்னதான் செய்கின்றாய் நீ?”
“அப்படி என்ன தான் செய்கின்றாய் நீ?!
சமையல் வேலை கூட முடிந்து விட்டதே!
இனி ஹாயாக சீரியல் சம்மேளனம் தானே?”
இது தினசரி டயலாக் ஒவ்வொரு வீட்டிலும்!
கேட்டுக் கேட்டுக் காது புளித்து போயிற்று!
அன்று நிஜமாகவே சீரியல் சம்மேளனம்!
அன்று மாலை வீடுதிரும்பிய கணவன்
பயந்து வியந்து போய்க் கேட்டான்,
“என்ன ஆயிற்று இன்று நம் வீட்டுக்கு?
சுனாமி அடித்ததுபோல இருக்கின்றதே?”
“என்ன வேலை செய்கின்றேன் என்று காட்ட
எந்த வேலையையும் செய்யவில்லை இன்று!
இது போல வீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுவதே
தினமும் நான் செய்யும் ஒரே வேலை!” என்றாள்.
இந்த நெத்தியடி எப்படி இருக்கு???
#48. கதை சொல்லும் பாட்டியின் குறும்பு!
பாட்டி கதையில் கெட்டி & படு சுட்டி.
பாட்டி கணக்கில் மட்டும் ரொம்ப வீக்(?!)
கதை சொல்லும் போது அவள்
“பஞ்ச பாண்டவர்கள்
கட்டில் கால் போல
மூன்று பேர்கள்!”
என்று சொல்லி,
கையில் இரண்டு விரல்களைக் காட்டி,
தரையில் 1 என்று எழுதி
அதையும் அழித்து விடுவாளாம்!
பஞ்சபாண்டவர்கள் உண்மையில்
ஐவரா? நால்வரா? மூவரா?
இருவரா? ஒருவரா? பூஜ்யமா ?
இந்தக் கேள்வி மனதை விட்டு மறையாதாம்.
எப்படி லூட்டிப் பாட்டியின் naughty கணக்கு!!!
#49. “மறப்போம் மன்னிப்போம்”
“மறப்போம் மன்னிப்போம்”
என்கின்றார்கள் எல்லோரும்.
முற்றிலும் தவறான sequence அது!
மன்னித்து விட்டால் தானாகவே எல்லோரும்
மறைந்தும் போய்விடுகின்றார்கள்;
மறந்தும் போய் விடுகின்றோம்!
இதைக் கண்டு பிடிக்க எனக்கு
இத்தனை நாட்கள் தேவைப்பட்டன.
#50. அனைத்திலுமே ஆத்மா!
உள்ளது ஆத்மா அனைத்திலும் என்பர்.
உயிரற்ற பொருட்களிலும் கூடவா?
ஆமாம், உயிர் உள்ளவை மட்டுமன்றி
உயிர் அற்றவைகளிலும் உண்டு ஆத்மா!
நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும்,
நான் இப்போதெல்லாம் நம்புகிறேன்!
என்னுடைய கம்ப்யூடர் முடிவு செய்கிறது,
எவற்றைப் போஸ்ட் செய்யவேண்டும்,
எவற்றைச் செய்யக்கூடாது என்பதை.
சில போஸ்டுகள் போஸ்ட் ஆகா!
மூன்று, நான்கு முறை முயன்ற போதிலும்!
பிறகு தோன்றும்,”நல்லவேளை நான்
அதைப் போஸ்ட் செய்யவில்லை” என்று!
தலைவலியைப் பொருட்படுத்தாமல்
Type செய்தால் இன்டர்நெட் இருக்காது.
Enforced rest period தரும் எனக்கு!
பிறகு தானாகவே கனெக்ட் ஆகும்!
இப்போது நம்பித் தான் தீர வேண்டும்
இப்போது என்னுடைய P.C. is
an extension of my personality,
my Conscience and my thought process.