#56. அன்றும் இன்றும்.
1.
அன்று பணத்தைத் தண்ணீர் போல செலவழித்தார்கள்!
இன்று தண்ணீரைப் பணம் போலச் செலவழிக்கிறார்கள்!!
2.
அன்று கொடி இடையாள்; பொடி நடையாள்.
இன்று நடிகை தடிகை ஆனது எப்படி???
3.
அன்று வரனைத் தேடி அலைவார்கள்
கவலையுடன் பெண்ணைப் பெற்றவர்கள்!
இன்று வராலக்ஷ்மியைத் தேடி அலைகிறார்கள்
கவலையுடன் பிள்ளையைப் பெற்ற புண்ணியவான்கள்.
4.
அன்று இருபதில் கல்யாணம்;
பின்பு முப்பதில் கல்யாணம்.
இன்று நாற்பதில் கல்யாணம்.
எப்போது அறுபதில் கல்யணம்?
(அறுபதாங்கல்யாணம் அல்ல!!!)
#57.