#66. இது எப்படி இருக்கு?
நான்கு சகோதரர்கள்.
முதலவரும், மூன்றாமவரும்
இறையடி சேர்ந்து விட்டனர்.
நான்காமவரும் மறைந்தார்.
நாற்பது மைல் தொலைவில்
வசிக்கும் இரண்டாமவர்
பார்க்கச் செல்ல வில்லை!
பத்து அன்றும் செல்லவில்லை!
சுப ஸ்வீகாரம் அன்றும் அவர்
அந்த வீட்டுக்குச் செல்லவில்லை.
அந்தத் தம்பியின் மனைவியே இவர்
வீட்டுக்கு வரவிரும்பியபோதும்
முகத்தில் அடித்தபோல சொன்னார்
“சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை!”
சாஸ்திரம் என்ன ஒன் வே டிராஃபிக்கா?
இவர்களுக்கு இல்லாத சாஸ்திரம்
அவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது???
#66. இது எப்படி இருக்கு???
“ஒரு நாளாவது…. ஹூஹும்!!!”
ஒரு மனிதன் தினமும் அதே சினிமா பார்க்க வருவான்.
ஒரு டிக்கெட் எடுத்தது உள்ளே செல்வான்.
ஒரு காட்சி முடிந்ததும் வெளியேறி விடுவான்.
நண்பன் அதிசயித்துக் கேட்டான்,
” தினமும் தவறாமல் பார்க்கும்படி
அதில் அப்படி என்ன தான் இருக்கு?”
“கதாநாயகி ஆற்றில் குளித்துவிட்டுக்
கரை ஏறும்போது சரியாக ஒரு ரயில் வருகிறதே!
அந்த சனியன் பிடித்த ரயில் என்றாவது
ஒரு நாளாவது லேட்டாக வருமா என்று பார்க்கிறேன்”
பின் குறிப்பு.
இது நடந்தது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பு…
கதாநாயகிகள் உடல் அழகைக் காட்சிப் பொருள் ஆக்கும் முன்பு!
#69. இது எப்படி இருக்கு???
“ஒரு தடவையாவது….!!!”
அதிசயமாக நிஜமான இளம் தம்பதியர்!!!
பெண்ணின் கண்களில் குறும்பு கொப்பளித்தது.
மருதாணிக் கைகளில் குலுங்கும் வளையல்கள்.
ஒன்பது கஜப் புடவையில் அழகான பொம்மை போலவே!
புதுக் கணவன் தாலி கட்டியதும் படையோட்டம் போல்
எல்லோரும் ஜம்ப் பண்ணி மேடை மேலே கை குலுக்க!
கணவனின் கசின் கை குலுக்கினான் ஓ கே!
கணவனின், கசினின், மச்சானின், தம்பியும் கூடவா?
ஒரு தடவையாவது எப்படியாவது
அந்தத் தளிர்க் கரத்தைப் பற்ற வேண்டும்
என்ற ஆவல் அனைவர் முகத்திலும்
எழுதி ஒட்டி இருந்தது பெரிய எழுத்தில்.
சபலம்…….சுலபம் ஆனது!
#69. இது எப்படி இருக்கு???
பாத்திரம் தேய்த்து கவிழ்த்தும் draining போர்டில்
அஞ்சு இன்ச் உயரத்துக்கு சில செடிகள்.
சிதறிய கடுகிலிருந்து முளைத்தவை???
புழு போல் காம்பும் இரண்டே இரண்டு இலைகளும்!!!
தண்ணீரை மட்டுமே நம்பி வளர்ந்து அதிசயம் தான்.
வெளியில் முதல் மாடி உயரத்தில்
தண்ணீர் பைப்பில் ஒரு சிறு செடி இருந்தது.
இப்போது அது Medusa போல் ஏகப்பட்ட
இலைகளுடனும், வேர்களுடனும்!
எல்லாமே நமக்கு visible தான்!
அங்கு தான் மண்ணே இல்லையே!
பைப்பில் வளர்ந்து தழைத்து நிற்பது கற்றாழை!
“The tough get going when the going gets tough!”
நூற்றுக்கு நூறு உண்மையே!
எவ்வளவு உயரம் வளருகிறது பார்க்கலாம்.
#70. அவள் யார்???
வருகிறவர் போகிறவர் கால்களை எல்லாம்
ஏக்கத்துடன் பார்க்கும் அவள் யார்???
பல்லைப் பார்த்தால் பல் டாக்டர்.
காலைப் பார்த்தால்…..
செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மனைவி!
அறுந்த வாருடன், பாலிஷ் தேவைப்படும் ஷூவுடன்
ஏதேனும் கால்கள் வருகின்றனவா?
வந்தால் தானே இரவு வீட்டில் அடுப்பு எரியும்!!!