#96. எத்தனை திறமைகள்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
எத்தனை மனிதர்கள் ஒளிந்துள்ளனர்!!!
அத்தனை மனிதர்களுக்குள்ளும்
எத்தனை திறமைகள் ஒளிந்துள்ளன!!!
#97. இஞ்சி
கெஞ்சினாலும் கிடைக்காத இஞ்சியை,
மிஞ்சுவது ஏதும் இல்லாத இஞ்சியை,
கொஞ்சம் போலச் சேர்த்தாலே போதுமே!
நெஞ்சம் மகிழ அடைகளை அடிக்கலாமே !!!
#98. வடாம் மாவு…
கிளரும் முன் கிளறிய பின்!!!
வடாம்…………
காயும் முன் காய்ந்த பின்!!!
தேன்குழல் மாவு…..
வேகும் முன் வெந்தபின்!!!
வயிறு ……………
ரிப்பேர் ஆகும் முன் ரிப்பேர் ஆன பின்!!!
#99. பொங்கல்!
நம்மவர்கள் அது புத்திசாலிகள் தான்!
குளிருக்கு இதமாக, பதமாகக் கொடுப்பது
சுள்ளென்று சுவைக்கும் சூடான
நெய் மணக்கும் வெண் பொங்கல்!!!
தெருவில் சுற்றிப் பாடிவிட்டு வந்தால்
உடனடித் தேவை கலோரீகள்!
அது கிடைக்கும் இனிப்புப் பொங்கலில்!!!
பக்தி இல்லாதவர்களையும் பற்றி இழுக்கும்
சக்தியும், வல்லமையும் படைத்தவை இவை!
குளிரில் இளம் சூடான படுக்கையை விட்டு எழுந்து
நடுக்கும் நீரில் குளித்துவிட்டு வருவதற்கு
நல்லதொரு பலன் வேண்டாமா சொல்லுங்கள்!!!
#100. திடீர் வித்வான்கள்!
அப்பளமாவை ஒருகை (ஒரு வாய்?) பார்த்துவிட்டு
தப்பாத தாளத்துடன் பலர் திடீர் வித்வான்கள்
மிருதங்கம் இல்லாமலேயே ஜதிக்கோர்வைகளை
அருமையாக வாசிப்பதைக் கேட்டு இருக்கிறீர்களா???