Q101 to Q105

#101. விரலுக்குத் தகுந்த வீக்கம்.

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.

குருவி தலையில் பனங்காய்.

Things should be in the right proportions

as proved by these three proverbs.


#102. அலையும், கடலும்.

“வாழ்க்கையே அலை போலே …

நாம் எல்லாம் அதன் மேலே ……

ஓடம் போல ஆடிடுவோமே வாழ் நாளிலே!”

எத்தனை உண்மையான வார்த்தைகள்.

மண ஆண்டு நிறைவு நாள் அன்றே கணவன் இறந்தார்,

மனத்தை தேற்றிக் கொண்டு மகனின்

மகள் பிரசவத்தில் கவனம் செலுத்தினாள்.

கொள்ளுப் பேரனைக் கண்டு மகிழ்வதா?

கணவனை எண்ணியபடி அழுவதா?? ?

“பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்!”

மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது!

மகளுக்கு மணம் பேசிவரும் இளைய மகன்…

உள்ளங்கையில் தாங்குவான் என்று எண்ணிய மகன்…

தன் மகளைப் பெரிய டாக்டர் ஆக்கிய மகன்…

கண் இமைக்கும் நேரத்தில் கண் மூடினான்

மாரடைப்பு என்னும் “silent killer” காரணமாக!

உறைந்தும், உடைந்தும் போனவளின் கண்களும்

உறைந்து போய்விட்டனவா? அழவே இல்லையாம்!

முதியவர் இருக்க, இளையவர் மறைந்து செல்வது

முட்டாள்தனமாகத் தெரியவில்லையா இறைவா?

ஒரு வரம் கேட்பேன் நான் உன்னிடம்

இனி ஒரு முறை இந்தக் கொடுமையை

எந்தப் பெண்ணுக்கும் அளிக்காதே!


#103. ஜாக்பாட்!!!

சாம்பார், பாயசம் பரிமாறும்போது நன்கு
கலக்கி விட்டுப் பரிமாறுகிறோம்! எதற்கு???

கலக்கும்போது எல்லோருக்கும் ஒரே போலக் கிடைக்கும்!

அல்லது கடைசியில் வருபவர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!!!
பருப்பு, குழம்புத் தான், கிஸ்மிஸ், முந்திரி வகையறா.

குழப்பல் வேறு வகை.

தெளிந்த குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது போல்!
தெளிந்த ரசத்தைக் கலக்கி குழம்பாக்குவது போல!!


#104. அடையா??? பீடையா???

அதன் பெயர் அடை!

பெருத்து விடும் இடை.

வாங்கணும் புது உடை.

கூடிவிடும் நம் எடை.

டிபன்களில் இது கடை.

செய்ய வேண்டும் தடை

மாறிவிடும் நம் நடை.

ஓடிவிடும் பெரும் படை

எப்போது திறக்குமோ மடை?

இதற்குத் துணைவன் வடை.

கொடுக்க வேண்டும் விடை.

இன்னும் என்ன தடை???


#105. இது எப்படி இருக்கு???

தன் அப்பாவின் மூன்றாவது வயதில்

எடுத்த குழந்தைக் கண்ணன் போட்டோவை

பார்த்தவுடன் இனம் கண்டு கொண்டது எப்படி??

“யார் இந்தப் பாப்பா?” என்று நான் கேட்டதும்

ஒரு நொடிகூட சிந்திக்காமல் “டாடி” என்றது எப்படி???

பெரியப்பாவின் குழந்தைக் கண்ணன் போட்டோவை

சிறிதும் அடையாளம் காண முடியாமல் போனபோதும் !!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *