Q106 to Q110

#106. இவர்கள் மனைவிகள் ஆனால்….!!!

எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர்—பெஞ்சின் மேல் ஏற்றிவிடுவார்

மிடில் ஸ்கூல் டீச்சர்—இம்போசிஷன் கொடுப்பார்.

ஹை ஸ்கூல் டீச்சர்—வீட்டுக்கு வெளியே வீதியில் நிற்க வைப்பார்.

ப்ரோஃபஸர்—லெக்சர் அடித்தே உயிரை வாங்கி விடுவார்.

லேடி போலீஸ்—ரௌண்டு கட்டி லத்தி சார்ஜ் செய்வார்.

லேடி போலீஸ் இன்ஸ்பெக்டர்—லாக்-அப்பில் தள்ளி விடுவார்.

லாயர்—நிற்க வைத்துக் கேள்வி கேட்பர்.

டாக்டர்—ஊசி போட்டுவிடுவார்.

Air ஹோஸ்டஸ்—“coffee, tea or me?” எனக் கேட்டு வயிற்றில் அடிப்பார்.

ஆட்டோ டிரைவர்—ஃபுல் ஸ்பீடில் ஆட்டோவில் ஃப்ரீ ride கொடுப்பார்.

மானேஜிங் டைரக்டர்—எல்லாவற்றுக்கும் காரணம் கேட்பார்!

டென்டிஸ்ட்—பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பார்.

பாட்டு டீச்சர்—முகாரி ஆலாபனை செய்வார்.

டான்ஸ் டீச்சர்—ஜதியிலேயே மிதிப்பார்.

வீணை டீச்சர்—நாரதர் போல் வீணையுடன் “அம்மா வீட்டுக்குப்” போய் விடுவார்.

கிரிக்கெட் பாட்ஸ் வுமன்—விளாசித் தள்ளுவார்.

ஸ்பின் பௌவ்லர்—நெற்றிப் பொட்டைக் குறி வைப்பார்.

P. T. டீச்சர்—உச்சி வெய்யிலில் நிற்க வைப்பார்.

டிராஃபிக் போலீஸ்—ஃபைன் கட்டச் சொல்லுவார்.


#107. Anonymity.

என் புருஷனும் கச்சேரிக்கு போகிறார்

இது பழைய பழமொழி.

என் புருஷனும் ஃபோரமில் எழுதுகிறார்.

இது ரொம்பரொம்பப் புது மொழி.

அப்பாவி போல் நடித்துக் கொண்டு

தப்பான பார்வை பெண்களைப் பார்த்து

எப்போதும் ஜொள்ளு விடுபவர்களுக்கு

நப்பாசை தீரத் தேவை…… ANONYMITY!!!


#108. பிளாஸ்திரியும், சாஸ்திரியும்!!!

அப்பாவி மனைவிக்குத் தெரியாமல்

தப்பான பார்வை பார்க்கும் மாமாவை

தப்பாத குறியுடன் அப்பாவி மனைவி

அப்பளக் குழவியால் அடிக்கும்போது

சாஸ்திரி மாமா பிளாஸ்திரி மாமா ஆனார்.


#109. “பாவிலே சிறந்த பா என்ன பா?”

“அது லலிதாவா? வசந்தாவா?”

“அது யாராக இருந்தால் உமக்கு என்ன ஓய்!

வந்த வேலையை மட்டும் பாரும்!

பாட்டுக் கேட்க வந்தீரா மாமிகளை

நோட்டம் போட வந்தீரா? சொல்லும் !”

“அது நாயகியா அல்லது தர்பாரா?”

இது போன்ற கேள்விகளும் அதற்கு

புதுமையாக வரும் பதில்களும் என்னை

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்!

இசையை ரசிக்க அறிவு தேவை தான்.

ஆனால் அது “ஷட்ஸ்ருதி ரிஷபத்துக்கு பதிலாக

சதுஸ்ருதி ரிஷபம் பிடித்து விட்டார் பாகவதர்!”

என்று சொல்லும் அளவுக்குத் தேவை இல்லை!

அபஸ்வரம் கேட்டால் காதுகளுக்கே தெரிந்துவிடும்!

அது என்ன ஸ்வரம் என்ற ஆராய்ச்சியில் அடுத்து வரும்

அழகான சங்கீதத்தை மிஸ் பண்ணக் கூடாது!

கவிதையும் அது போன்றே!

கவிதை உணர்ச்சிகளின் வெளிப்பாடாகப் பொங்கி வரவேண்டும்.

அதில் உணர்ச்சி பூர்வமே மிகவும் முக்கியம் ஆனது!

நேர் நேர் நேர் = தேமாங்காய்

நிரை நிரை நிரை = புளிமாங்கனி

இதைத் தெரியாதவனும் கவிதை எழுதலாம்.

இது புரியாமலேயே கவிதையை ரசிக்கலாம்.

சீர், தளை, தொடை என்ற ஆராய்ச்சியில்

கவிதையின் கருத்துக்களைத் தவறவிட வேண்டாம்

இத்தனை எளிய கவிதைகளைப் படிக்கவே

எத்தனயோ பேருக்கு தேவை ‘கோனார் நோட்ஸ்’!

இனியாகிலும் மயிரிழை ஆராய்ச்சி வேண்டாம்.

“பாவிலே சிறந்த பா என்ன பா?”

“பாவிலே சிறந்த பா அப்பப்பா!”


#110. காவிய நாயகி

காவிய நாயகி மிகவும் அழகி!
நாயகியின் தோழி அறிவாளி!!

அழகி நாயகியாகத் தான் இருக்கவேண்டும்.
அறிவாளி தோழியாகத் தான் இருக்க வேண்டும்.

அழகியை அனைவரும் தாங்குவார்.
அறிவாளி அனைவரையும் தாங்குவார்.

Handsome people get served.
Brainy people serve the others.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *