#121. கறையானும், கருநாகமும்!
கரையான் புற்றை எழுப்பும்!
கருநாகம் அதில் குடியேறும்!!
அரும்பாடு பட்டு கட்டினதை
அடுத்தவன் வந்து அபகரிப்பது
விலங்குகளின் செயல் மட்டும் அல்ல!
விலங்குகளை விடக் கேவலமான சில
மனித உருவில் உலா வரும் மட்டமான
மனிதர்களும் மனம் விரும்பிச் செய்வதே!
வியர்வை சிந்தி உழுது பயிர் செய்பவர் ஒருவர்!
விளைந்த பயிரை அறுவடை செய்பவர் ஒருவர்!!
எலிக்கு பயந்து வீட்டைக் காலி செய்வார்களா?
காலியும் செய்வார்கள்; அவசியம் ஏற்பட்டால்
வீட்டையும் கொளுத்துவார்கள்! வேறு வழி???
#125. இது எப்படி இருக்கு??
செருப்பின் அருமை வெய்யிலில் தெரியும்.
நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
சோலையின் அருமை பாலையில் தெரியும்.
தோழியின் அருமை விலகுவதில் தெரியும்.
#123. ஆணா அல்லது பெண்ணா???
மண்ணில் குழந்தை விழுந்த உடனேயே
பெண்ணா ஆணா எனத் தெரிந்து கொள்ள
விண் என்று ஓர் இடத்துக்கு அனைத்துக்
கண்களும் பாயும் எய்த அம்புகள் போல!
காரணம் வேறு வேறுபாடுகள் இராது!
அதன் பிறகு பெற்றோர் அல்லது ஆயா
அதை காணமுடியும்; மற்றோர் அல்ல!
அதைக் காட்டிக் கொண்டு திரிந்தாலும்
இதைச் சொல்லிப்பாடுவார்கள் கேலியாக!
“ஷேம் ஷேம் பப்பி ஷேம்
ஆல் தி டாங்கிஸ்
நோ யுவர் நேம்!”
மதி முகத்தைக் காட்ட வேண்டாம்!
கதி கலங்க வைக்கவும் வேண்டாம்!!
ஒரு சிறு விரல் நகம் போதும்
அறியலாம் ஆணா? பெண்ணா?
வெண்டைக் காய்க்கு
ஏன் இந்தப் பெயர்?
“Ladies-finger”
பெண்கள் விரல் போல உள்ளது.
ஆண்கள் விரல் போல அல்ல!
ஒரு silhouette போதும் தாராளமாக!
ஒரு கண்ணோ, புருவமோ போதும்!
ஒரு நாசியோ, உதடுகளோ போதும்!
வேறுபாடுகளைக் கண்டு பிடிப்பதற்கு!
#124. ஜாடிக்கேத்த மூடி (பழமொழி)
புதுமொழிகள் உள்ளன நிறைய.
கண்டு பிடிக்கலாம் நீங்களும் கூட,
மண்டையைச் சற்று கசக்கினால்!
வாடியம்மா வாடி!
ஜாடிக்கேத்த மூடி!!
ஜேடிக்கேத்த ஜோடி!
கேடிக்கேத்த லேடி!!
துடிக்குதடி நாடி!
போகலாமா ஓடி?
#125. சங்க நிதி பதும நிதி
இந்த வாய்ப்பாட்டை ஒட்டியனவாக இருக்கவேண்டும்!!!
எண் வாய்பாடு
10கோடி = 1 அற்புதம்
10 அற்புதம் = 1 நிகற்புதம்
10 நிகற்புதம் = 1 கும்பம்
10 கும்பம் = 1 கணம்
10 கணம் = 1 கற்பம்
10 கற்பம் = 1 நிகற்பம்
10 நிகற்பம் = 1 பதுமம்
10 பதுமம் = 1 சங்கம்
10 சங்கம் = 1 சமுத்திரம்
10 சமுத்திரம் = 1 ஆம்பல்
10 ஆம்பல் = 1 மத்தியம்
10 மத்தியம் = 1 பரார்த்தம்
10 பரார்த்தம் = 1 பூரியம்
It precedes the Metric system by several millenniums!!!
Sankha nidhi = 10 to the power of 14 = 100,000,000,000,000 = one hundred trillions
Padma nidhi = 10 to the power of 15 = 1000,000,000,000,000) = one thousand trillions.