#131. இக்கரைக்கு அக்கரை பச்சை?!
பல் முளைக்கும் முன்பே வேண்டும்
பலகாரங்கள், பழங்கள் விதவிதமாக!
உமிழ்நீர் ஊறி வழியப் பார்க்கும், கேட்கும்
உண்ண முடியாத உணவு வகைகளை!
குடிக்க முடிந்த பால் வேண்டவே வேண்டாம்!
கடிக்க முடியாதவைகளோ எல்லாம் வேண்டும்!
மூன்று மாதம் என்பது மாறி இப்போது
மூன்று வயது நிரம்பி விட்டது என்றால்;
அன்று விரும்பிய உணவுகளைக் கண்டு
இன்று பிடிக்கும் ஓட்டம் வீடு முழுவதும்!
துரத்தித் துரத்தி ஊட்டவேண்டும் உணவை;
விரட்டி விரட்டிப் பிடித்து அவர்களுக்கு!
#132. எதற்கு இது நமக்கு?
Pet Peeve என்பது உண்மையே இங்கே.
Pet என்ன status symbol ஆகிவிட்டதா?
நிறையப் பணம் வேண்டும் அவற்றை
சரியாகப் பராமரிக்க எண்ணினால்!
நிறைய சமயம் வேண்டும் அவற்றுடன்
குறைவின்றி விளையாடிக் களிப்பதற்கு!
ஒருமுறை pet vet சாதா விசிட் = 50 $
ஒருமுறை சிகித்சைக்கு எத்தனை $???
ஊரைவிட்டுப் போனால் pet sitter நம்மை
உறிஞ்சி விடுவார் baby sitter போலவே!
எல்லா இடங்களுக்கு எடுத்துச் செல்வதும்
எல்லோரையும் சமாளிப்பதும் மிகக் கடினம்.
அன்பு செய்ய யாரும் இல்லாத சில பல
அநாதை பணக்காரர்களுக்குத் இவை தேவை
நம்மைப் போன்ற நேரம் இல்லாதவர்களுக்கும்,
நல்ல குடும்பம் உள்ளவர்களுக்கும் இவை எதற்கு?
#133. பறங்கியோடு ரகளை!
Halloween வந்தாலும் வந்தது பாரும் !
எங்கு நோக்கினும் பறங்கிக் காய்கள்.
தங்க நிறம் கொண்டிருந்த போதிலும்
தாங்க முடியவில்லை தாக்கத்தை!
ஆண்டுக்கு ஒருமுறை உண்போம் இதை
தான்களாகப் பொங்கல் குழம்பில் இட்டு.
அன்றாடம் உண்ணச் செய்வது
என்பது எந்தவிதத்தில் நியாயம்.
தெனாலியின் பூனை போல இனிமேல்
கண்டதும் நாம் பிடிப்போமோ ஓட்டம்?
#134. இது என்ன காந்திக் கணக்கு?
Organic food sign up என்றார்கள்
Original natural food என்றார்கள்
விலையோ மூன்று மடங்கு தான் !
விற்கும் இடத்துப் போக வேண்டும்!!
வாரம் வாரம் தலையில் கட்டுவது
பறங்கியும் தர்பூசணியும் மட்டுமே!
“வேண்டம் இவை!” என்றால் கிடைக்கும்
வினோதமான ஒரு விசேஷ சமன்பாடு!
ஒரு தர்பூசணி = ஒரு பறங்கிக் காய்!
ஒரு பறங்கிக் காய் = இரண்டு தக்காளி!!
இரண்டு தக்காளி. = மூன்று வெங்காயம்!!!
மூன்று வெங்காயம்.= ????
அதற்குப் பிறகு இல்லை சமன்பாடு!
இதற்குப் பிறகு இல்லை எதுவும் வேறு.
இத்துடன் முடிந்துவிடவில்லை
அற்புதமான organic மகாத்மியம்.
அடிபட்ட தர்பூசணியைப் பழத்தையும்,
அச்சம் தரும் பெரிய பறங்கிக்காயையும்
உற்சாகமாகக் இவர்கள் கொண்டு வர – நான்
உற்சாகம் இழந்த, காற்றுப்போன ஒரு பலூன்!
இத்தனையும் போதாது என்பது போல
இந்தமுறை அழுகின இரு தக்காளிகள்!!!
(where and when)
இரண்டு தக்காளி = ஒரு பறங்கிக் காய்
ஒரு பறங்கிக் காய் = ஒரு தர்பூசணி
#135. பாண்டியன் எக்ஸ்பிரஸ்
பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்ததாம்
பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே!
பின்னர் கண்டுபிடித்தனர் சிலர் அது
வந்தது ஒரு நாள் தாமதமாக என்று!
மனிதர்களில் உள்ளனர் இதுபோல!
தனித்துவம் என்னவென்று தெரியுமா?
எல்லாமே வரும் ஒரு நாள் தாமதமாக!
எல்லோரும் ஆகலாம் பாண்டியன் போல!