L1 to L25.

#1.
அடி = பாதம்
அடி = நையப்புடை.
#2.
அண்ணா = தமையன்.
அண்ணா = தலையை நிமிர்த்தி மேலே நோக்கு.
#3.
அணங்கு = தெய்வமகள்.
அணங்கு = வருத்து.
#4.
அணி = நகைகள்.
அணி = போட்டுக்கொள்.
#5.
அணை = அணைக்கட்டு.
அணை = அணைத்துக்கொள்.

#6.அப்பு =தந்தை.
அப்பு = பூசு.
#7.
அமர் = போர்.
அமர் = உட்கார்.
#8.
அமை = மூங்கில்.
அமை = பொருத்து.
#9.
அயிர் = நுண்மை.
அயிர் = சந்தேகப்படு.
#10.
அயில் = இரும்பு.
அயில் = உண்ணு.

#11.
அரக்கு = சிவப்பு மெழுகு.
அரக்கு = உள்ளங்கையால் தேய்.

#12.
அரங்கு = மேடை.
அரங்கு = அழுந்து.

#13.
அரவு = பாம்பு.
அரவு = ஒலிஎழுப்பு.

#14.
அரி = விஷ்ணு.
அரி = அறுத்து எடு.

#15.
அருகு = சமீபம்.
அருகு = குறைந்து போ.

#16.
அருள் = கருணை.
அருள் = மனம் மகிழ்ந்து கொடு.

#17.
அல்கு = பிற்பகல்.
அல்கு = அழிந்து போ.

#18.
அலக்கு = துரட்டுக்கம்பு.
அலக்கு = அசையச் செய்.

#19.
அலை = கடல் அலை.
அலை = இங்கும் அங்கும் திரி.

#20.
அவி = உணவு.
அவி = புழுங்கு.

#21.
அவை = கூட்டம்.
அவை = தானியம் குற்று.

#22
அழல் = நெருப்பு.
அழல் = பிரகாசி.

#23.
அழி = கேடு.
அழி = சிதைத்துவிடு.

#24.
அழுங்கு = எறும்பு தின்னி.
அழுங்கு = சோம்பியிரு.

#25.
அள்ளு = காது, பற்றிரும்பு (iron clamp)
அள்ளு = உள்ளங்கையால் முகர்ந்து எடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *