# 126.
கோது = சக்கை.
கோது = முடியைச் சிக்கெடு.
# 127.
கோபி = சினம் கொண்டவன்.
கோபி = கோபம் கொள்வாய்.
# 128.
சகி = தோழி.
சகி = பொறுத்துக்கொள்.
# 129.
சங்கரி = பார்வதி.
சங்கரி = அழித்துவிடு.
# 130.
சடை = கற்றைத் தலைமுடி.
சடை = வளர்ச்சி குன்று.
# 131.
சதி = கற்புடைய மனைவி.
சதி = வஞ்சனை செய்.
# 132.
சந்தி = இணைதல்.
சந்தி = எதிர்ப்படு.
# 133.
சரி = வழி.
சரி = கீழே விழு.
# 134.
சாதி = வர்ணப் பிரிவு.
சாதி = நிறைவேற்று.
# 135.
சாம்பு = பறை.
சாம்பு = வாடிப்போ.
# 136.
சிக்கு = சிக்கல்.
சிக்கு = அகப்படு.
# 137.
சிதை = ஈம விறகு.
சிதை = அழித்து விடு.
# 138
சிந்து = ஒருவகைப் பாடல்.
சிந்து = சிதறிவிடு.
# 139.
சிமிழ் = செப்பு.
சிமிழ் = அகப்படுத்து.
# 140.
சிறை = காவல்.
சிறை = காவலில் வை.
# 141.
சினை = முட்டை.
சினை = கருத்தரி.
# 142.
சீறு = சீற்றம்.
சீறு = ஒலியுடன் கூடிய மூச்சு விடு.
# 143.
சுடர் = ஒளி.
சுடர் = ஒளி வீசு.
# 144.
சுண்டு = அற்பம்.
சுண்டு = நீரை வற்றச்செய்.
# 145.
சுருக்கு = மடிப்பு.
சுருக்கு = ஒதுக்கி விடு.
# 146.
சுருட்டு = சுருள் புகையிலை.
சுருட்டு = அபகரித்துக்கொள்.
# 147.
சுருள் = சுருண்ட பொருள்.
சுருள் = சுருங்கி விடு.
# 148.
சுவை = ருசி.
சுவை = உண்டு ருசி பார்.
# 149.
சுழல் = சுழி நீர்.
சுழல் = வட்டமாகச் சுற்று.
# 150.
சுழி = பூஜ்ஜியம்.
சுழி = அங்கச் சுழி உண்டாக்கு.