# 176.
தளி = நீர்த்துளி.
தளி = தெளிவாக அறிவாய்.
# 177.
தளிர் = இளம் இலை.
தளிர் = செழிப்பாகு.
# 178.
தளுக்கு = மினுக்கு.
தளுக்கு = பிரகாசிப்பாய்.
# 179.
தளை = காட்டு.
தளை = அடக்கிவிடு.
# 180.
தறி = முளை.
தறி = வெட்டிவிடு.
# 181.
தனி = ஒற்றை.
தனி = நிகர் அற்று விளங்கு.
# 182.
தா = வலிமை.
தா = தருவாய்.
# 183.
தாழ் = தாழ்ப்பாள்.
தாழ் = கீழே சாய்ந்துவிடு.
# 184.
தாளி = பனைமரம்.
தாளி = உணவைத் தாளிதம் செய்.
# 185.
திக்கு = திசை.
திக்கு = தட்டுத் தடுமாறிப் பேசு.
# 186.
திகை = தேமல்.
திகை = பிரமித்துவிடு.
# 187.
திட்டு = மேடு.
திட்டு = நிந்தனைசெய்.
# 188.
திணி = செறிவு.
திணி = நன்றாக உட்புகுத்து.
# 189.
தித்தி = சிற்றுண்டி.
தித்தி = இனிப்பாக இரு.
# 190.
திதி = நாள்.
திதி =இனிப்பாக இரு.
# 191.
திமிர் = கர்வம்.
திமிர் = வாரி இறை.
# 192.
திரட்டு = தொகை நூல்.
திரட்டு = ஒன்றாகச் சேர்.
# 193.
திரள் = கூட்டம்.
திரள் = உருண்டை ஆக்கு.
# 194.
திரி = விளக்கின் திரி.
திரி = இங்கும் அங்கும் அலை.
# 195.
திருகு = சுரி.
திருகு = முறுக்கி இறுக்கு.
# 196.
திரை = அலை.
திரை = உடல் சுருங்கி விடு.
# 197.
தீட்டு = அசுத்தம்.
தீட்டு = கூராக்கு.
# 198.
துணி = ஆடை.
துணி = தைரியம் அடை.
# 199.
துணை = உதவி.
துணை = ஒத்திரு.
# 200.
துதி = புகழ் மொழி.
துதி = தோத்திரம் செய்.