# 201.
துப்பு = வலிமை.
துப்பு = உமிழ்.
# 202.
துமி = மழைத்துளி.
துமி = வெட்டிவிடு.
# 203.
துய் = உணவு.
துய் = நுகர்வாய்.
# 204.
துவை = ஒலி.
துவை = துணிகளை சுத்தம் செய்.
# 205.
துளி = சிறிதளவு.
துளி = சொட்டாக விடு.
# 206.
துளை = துவாரம்.
துளை = நீரில் விளையாடு.
# 207.
தூக்கு = தொங்கும் பொருள்.
தூக்கு = உயரத் தூக்கு.
# 208.
தூர் = அடிப்பகுதி.
தூர் = நிரம்பு.
# 209.
தூறு = புதர்.
தூறு = மழைத் தூவு.
# 210.
தேக்கு = ஒரு மரம்.
தேக்கு = ஓட்டத்தைத் தடை செய்.
# 211.
தேர் = ரதம்.
தேர் = ஆராய்வாய்.
# 212.
தை = ஒரு மாதம்.
தை =தையல் வேலை செய் .
# 213.
தொலை = வெகு தூரம்.
தொலை = காணாமல் போக்கிவிடு.
# 214.
தொழு = மாட்டுக் கொட்டகை.
தொழு = வணங்கு.
# 215.
நக்கு = நிர்வாணம்.
நக்கு = நாவினால் தடவு.
# 216.
நகர் = நகரம்.
நகர் = நகர்ந்து செல்.
# 217.
நகை = அணிகலன்.
நகை = சிரி.
# 218.
நச்சு = ஆசை.
நச்சு = தொந்திரவு செய்.
# 219.
நசை = ஆசை.
நசை = விரும்புவாய்.
# 220.
நடி = நாட்டியப் பெண்
நடி = பாசாங்கு செய்.
# 221.
நனை = பூ அரும்பு.
நனை = ஈரம் ஆக்கு.
# 222.
நாடு = தேசம்.
நாடு = தேடிச்செல்.
# 223.
நால் = நான்கு.
நால் = தொங்கு.
# 224.
நாறு = முளை.
நாறு = மணம் வீசு.
# 225.
நிரப்பு = நிறைவு.
நிரப்பு = முடிவுறச் செய்.