#26.
அளி = அன்பு.
அளி = கொடு.
#27.
அளை = தயிர்.
அளை = துழாவு.
#28.
அற்று = அத்தன்மையது.
அற்று = இல்லாமல் போனது.
#29.
அனல் = கனல்.
அனல் = வெப்பம் வீசு.
#30.
அனுபவி = ஆத்மஞானி.
அனுபவி = இன்புற்றிரு.
#31.
ஆட்டு = கூத்து.
ஆட்டு = அதிரச் செய்.
#32.
ஆடு = ஒரு மிருகம்
ஆடு = சஞ்சரி.
#33.
ஆவலி = வரிசை.
ஆவலி = அழுது புலம்பு.
#34.
ஆள் = ஆண் மகன்.
ஆள் = அரசு செய்.
#35.
இசை = சங்கீதம்.
இசை = பாடு / வாசி.
# 36.
இடுக்கு = மூலை.
இடுக்கு = நெருக்கி அழுத்து.
# 37.
இடை = இடுப்பு.
இடை = பின் வாங்கு.
# 38.
இணை = ஜோடி.
இணை = பொருத்திவிடு.
#39.
இமை = மயில்.
இமை = கண்களைச் சிமிட்டு.
#40.
இரு = பெரிய, கரிய.
இரு = உட்கார்.
#41.
இரை = உணவு.
இரை = ஓசை உண்டாக்கு.
#42.
இலகு = பளுவின்மை.
இலகு = பளபளப்பாக இரு.
#43.
இவர் = மரியாதைக்கு உரியவர்.
இவர் = படர்ந்து முன்னேறு.
#44.
இழை = ஆபரணம்.
இழை = மாவாக ஆக்கு.
#45.
இளி = குற்றம்.
இளி = ஏளனம் செய்.
#46.
இளை = காவற்காடு.
இளை = மெலிந்து போ.
#47.
இறை = கடவுள்.
இறை = பாய்ச்சு.
#48.
ஈண்டு = இந்த இடத்தில்.
ஈண்டு = கூட்டமாகச் சேர்.
# 49.
உட்கார் = பகைவர்.
உட்கார் = அமர்ந்திரு.
# 50.
உடல் = உடம்பு.
உடல் = சினம் கொள்.