# 51.
உடு = நட்சத்திரம்.
உடு = ஆடை அணிந்து கொள்.
# 52.
உடை = ஆடை.
உடை = தகர்த்து எறி.
# 53.
உப்பு = உணவில் இடுவது.
உப்பு = பொங்கிப் பருத்து விடு.
# 54.
உமி = தானியத்தின் மேலுறை.
உமி = பொங்கிக் கொப்பளி.
# 55.
உரி = தோல்.
உரி = களைந்து விடு .
# 56.
உருமு = இடி, மின்னல்.
உருமு = பேரொலி செய்.
# 57.
உரை = தேய்வு.
உரை = சொல்லு.
# 58.
உழை = இடம்.
உழை = வருந்தி முயற்சி செய்.
# 59.
உளை = பிடரி மயிர்.
உளை = மனம் வருந்து.
# 60.
உறை = பெருமை.
உறை = திடப் பொருளாக இறுகு.
# 61.
ஊகம் = பெண் குரங்கு.
ஊகம் = யூகித்து அறிவது.
# 62.
ஊடு = இடைப் பட்டது.
ஊடு = பிணங்கு.
# 63.
ஊர் = நகரம்.
ஊர் = ஊர்ந்து நகரு.
# 64.
ஊறு = தொடு உணர்ச்சி.
ஊறு = சுரப்பது.
# 65.
எட்டு = ஒரு எண்.
எட்டு = நெருங்கி அடைவாய்.
# 66.
எதிர் = முன்னே.
எதிர் = நிகழ்த்து.
# 67.
எரி = நெருப்பு.
எரி = ஒளிவிடு.
# 68.
எருக்கு = ஒரு செடி.
எருக்கு = கொல்லு.
# 69.
ஏவு = அம்பு.
ஏவு = தூண்டிவிடு.
# 70.
ஏறு = ஆண் விலங்கு.
ஏறு = மேலே செல்.
#71.
ஒருங்கு = முழுமை.
ஒருங்கு = ஒன்று கூடு.
#72.
ஒளி = வெளிச்சம்.
ஒளி = மறைத்து விடு.
#73.
ஒன்று = ஒரு எண்.
ஒன்று = ஒன்றாகிவிடு.
#74.
ஓடு = மேல் கவசம்.
ஓடு = விரைந்து செல்.
#75.
கட்டு = ஒரு கொத்து.
கட்டு = அமைப்பாய்.