1. பேரன்புடையீர் => பேரன் + புடையீர் (பேரனை அடிக்கவேண்டாம்!)
2. தலைவிதிவசம் => தலை விதி வசம் / தலைவி திவசம்.
3. பிராமணர்கள் சாப்பிடும் இடம் => பிராமணர் கள் சாப்பிடும் இடம்.
(ஒரு Hotel Notice board இல் பார்த்தது)
4. சாவடி=> (ஆளைச்) சாவடி.
5. அரிசிவசம்போ=> அரி சிவ சம்போ/ அரிசி வசம் போ!
6. கஞ்சிவரதப்பா =>கஞ்சி வரதப்பா(பெருமாள்) / (குடிக்கும்) கஞ்சி வரதப்பா!
7. பழங்கள்=> (குடிக்கும்) பழம் + கள் / (உண்ணும்) பழங்கள்.
8. பல்துறை வித்தகர்=> பல்துறை வித்தகர் (திறமைசாலி) / பல்துறை வித்தகர்(பல் மருத்துவர்)
9. பாரதி சின்னப்பயல் => பார் அதி சின்னப் பயல்.
10. பாடகரின் காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.