#111. இது எப்படி இருக்கு???
வந்த பின் காப்பவர்
வட்ட நிலா முகத்தோடு
ஒட்ட வைத்த கரங்களோடு
எட்டிச் செல்பவர்களையும்
கிட்ட வருமாறு அழைத்து
கட்டுப்பாடு இல்லாமல் விட்டு
ஒட்டகமாக மாறிய பின்னர்
வெட்டி விட பாடாத பாடு
பட்டுத் திட்டுப் பட்டுக்
குட்டுப் பட்டுத் திண்டாடிக்
கெட்ட பெயர் வாங்குபவர்.
#112. இது எப்படி இருக்கு???
வருமுன் காப்பவர்!
எட்டிச் செல்பவர்கள்
கிட்டே வரும் முன்பே
கெட்டிகாரத் தனமாகக்
“கொட்டலாம் ஜால்ராவை!”
“தட்டலாம் கைகளை!” எனக்
கட்டுப்பாடுகளை விதித்துக்
கெட்டபெயர் வாங்காமலேயே
திட்டத்தை நிறைவேற்றுபவர்!
#113. உண்டியும், உறக்கமும்
உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகு.
உண்டி மட்டும் அல்ல உறக்கமும் கூட!
உறக்கம் பெரிய sponge போல் நேரத்தை
உறிஞ்சி எடுத்துவிடும் மிச்சம் இல்லாமல்.
அளவுக்கு மிஞ்சிய உறக்கம் அல்லல் தரும்.
அளவளாவ நேரம் இருக்காது! அவ்வளவு ஏன்?
உணவு சமைக்கக் கூட நேரம் இருக்காது.
உணவை தினம் போல் வாங்கி உண்டால்
ஊதி விடும் உடல்! ஒஜோசி ஆகும் பர்ஸ்!!
வீங்கி விடும் உடம்பு! தங்காது பணப்பை!!
#114. உண்டியும், உடையும்
உண்டி சுருக்குவதில்லை இங்கு யாருமே!
உடையைச் சுருக்கி விடுகிறார்கள்!!
போனால் போகிறது என்று
ஏராள, தாராள மனத்துடன்!!!
#115. Vicious circle
வயிறு நிறைந்தால் தான் குழந்தை உறங்கும்!!!
உறங்கும்போது தான் பாட்டில் பாலைக் குடிக்கும்!!!
“கல்யாணம் ஆனால் பைத்தியம் தெளியும்
பைத்தியம் தெளிந்தால் கல்யாணம் ஆகும்”
என்பதைப் போலவே இல்லை???