#146. ஜடமும், ஐட்டமும்.
ஜடம், ஜடம் என்று சொல்லிச் சொல்லிச்
சலித்துக் கொள்ளாதீர்கள் அன்பர்களே !
ஜடமாக அவள் இருப்பதால் தான்
ஜம்பம் சாய்கின்றது உங்களுடையது.
ஐட்டதைப் பார்த்து ஜொள்விடுபவரே!
ஐட்டம் உமது மனைவியாகி இருந்தால்,
அடுத்த வீட்டு ஆபீசர் பையனுடன் சேர்ந்து
கடுக்காய் கொடுத்து மறைந்திருப்பாளே!
#147. பயம் காட்டு அல்லது boycott.
இன்றைய உலகின் தாரக மந்த்ரம்
“பயம் காட்டு அல்லது boycott.”
இருக்கும் இல்லாத செல்வாக்கைக் காட்டி
பிறரை அச்சுறுத்துவது முதல் படி ஆகும்!
மொத்தமாக நிராகரித்து விடுவது அல்லது
மொத்தமாகத் தள்ளி வைப்பது என்பது
கற்பனை வளம் இல்லாதவர்கள் செய்யும்
அற்பமான ஒரு செயல் ஆகும் உலகினில்.
அவர்கள் அறியவில்லை இன்னமும் இதை;
எவராலும் சிலரை நிராகரிக்க முடியாததை.
நயந்து கொண்டு வருபவரைத் தள்ளலாம்!
சுயம் பிரகாசியை என்ன செய்ய முடியும்???
#148. The Trump card!
பெண் பார்ர்க்க வந்த ஓர் இடத்தில்
பெண் வெளிய வரவே இல்லையாம்.
பின்னர் தெரிந்ததாம் அந்தப் பெண்
இன்னமும் பால்குடியை விடவில்லை!!!
பதினைந்து வயதில் தாய்ப்பால் குடியா??
பைத்தியம் அன்னைக்கா? பெண்ணுக்கா??
நான் முதலில் நம்பவில்லை இந்தச் செய்தியை.
நான் இன்று நம்புகின்றேன் இந்தச் செய்தியை!
இங்கே ஐந்து, ஆறு வயதுக் குழந்தைகள் சிலர்
இன்னமும் தாய்ப்பால் தினமும் குடிக்கிறார்கள்!!!
தாய்மார்களே சொல்லுவதால் இதனை ஒரு
பொய்யென்று தள்ளவும் ஒரு வழி இல்லை.
அன்று என் தந்தையும் தாயும் கூறினார்கள்
நன்று ஒரு வயதில் தாய்ப்பாலை நிறுத்துவது.
இங்கோ அதை நிறுத்தும் எண்ணமும் இல்லை.
இங்கு அது செல்லுபடியாகும் ஒரு trump கார்டு!
எதற்கும் அடிபணியாத குழந்தைகளை மிரட்ட,
“எதிர் பார்க்காதே இனி special privileges !!!”
எத்தனை நாட்கள் தொடரும் இந்தக் கதை???
எப்படி மிரட்டுவர்கள் அதை நிறுத்திய பின்னர்???
எதற்கும் மசியாத அந்த முரட்டுக் குழந்தையின்
எதிர்காலம் என்ன??? எண்ணவே அஞ்சுகிறேன்!!!
#149. சிறியதும், பெரியதும்!
உணவு அருந்த அழைத்தார்கள்
உள்ளன்புடன் ஒரு வீட்டினர்.
மெல்லிய இனிய இசை ஒலிக்க,
மெல்லிய விளக்கொளி ஒளிர
வீடு ஒரு கோவில் போல இருக்க,
வீண் போகவில்லை எங்கள் பயணம்.
உணவும் வீட்டுத் தயாரிப்பு என்பதால்
காணவும் இனிமை, உண்ணவும் சுவை!
எல்லாம் முடிந்ததும் நாங்கள் விடை
சொல்லிக் கொண்டு கிளம்பும் வேளை
பெரியவருக்குப் போகவே மனம் இல்லை,
“இருந்து விடலாமா நான் இங்கேயே?”
நல்ல கேள்வி கேட்டார் இவர் என்றால்
செல்லக் குட்டியும் உடனே சொல்கிறாள்,
“இருந்து விடுகிறேன் நானும் இங்கேயே!”
விருந்துக்கு வந்த இடத்தில் தங்கி விடுவதா???
#150. Buffet
உடல் வீங்கி விடுகிறார்கள் இங்கு
உள்ள மனிதர்கள் எல்லோருமே!
“அடித்து இறக்குவது” என்று கேட்டுள்ளேன்!
அதை நேரில் கண்டேன் உணவு விடுதியில்!
கொடுத்த பணத்துக்கு வஞ்சனை இன்றி
அடித்து இறக்குகிறார்கள் உணவை உள்ளே!
பத்து டாலர் கொடுத்துவிட்டு உண்பதோ
பார்க்கும் உணவுவகைகள் எல்லாமே!
எப்படிக் கட்டுப் படியாகும் ஓனருக்கு?
எப்படியோ ஆகின்றது நிச்சயமாக!
இல்லாவிட்டால் என்றைக்கோ இதை
இழுத்துப் பூட்டி இருப்பார்கள் அன்றோ!
நினைவுக்கு வந்தது இந்தப் பொன் மொழி!
Don’t dig your own grave with
your own spoon, fork and knife!