Q156 to Q160

#156. JET-LAG VS GET-TOGETHER

ஒன்றரை வயதுப் பேரன் இந்தியா வந்தான்
மூன்று வார விடுமுறையில் என் மகனுடன்!

பிரார்த்தனைகளும் சில வேண்டுதல்களும்
பின் தொடர்ந்து வந்தன நான்கு ஆண்டுகளாக!

கல்யாண உற்சவம் முதன்மை வேண்டுதல் !
கந்தனின் தங்கத் தேர் இழுப்பது இரண்டாவது!

குலதெய்வங்களின் கோவில் விசிட் மூன்றாவது.
குடும்பத்தினரை விசிட் செய்வது நான்காவது.

இருப்பதோ ஏழு நாட்கள் மட்டுமே எங்களுடன்.
இருக்கும் அந்த ஏழு நாட்களில் என்ன முடியும்?

ஜெட் லேக் வந்தது போதாது என்பது போல
ஜெட் லேக் உடன் வந்தது ஜலதோஷமும் கூட!

பகல் முழுவதும் அவர்கள் அசந்து உறங்கினார்கள்.
பகல் ஆக்கினார்கள் நம்முடைய இரவுப் பொழுதை.

வீடு முழுவதும் ஓடி ஓடி இறைத்தான் பேரன்
வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும்.

மெர்குரி என்று அவனுக்குப் பேர் வைத்தேன்.
மெர்குரி தினம் வீட்டில் செய்ததோ சுனாமி!

எப்படியோ பிரார்த்தனைகளை முடித்தோம்
எங்களுடன் இருந்த அந்த ஒரு வாரத்தில்.

கல்யாண உற்சவத்தில் கண்மூடி உறங்கிப் போனது
கண்டுபிடியுங்கள் யார் என்று! சாக்ஷாத் நானே தான்!


#157. கூழும் வேண்டும், மீசையும் வேண்டும்!

ஜூலை மாதம் வருந்தி வருந்தி அழைத்தனர்
ஜம்மென்று மௌண்ட் ரஷ்மோர் செல்வதற்கு!

நல்ல கிளைமேட் ! உடல் நிறைய சக்தி இருந்தது.
பொல்லாத மனம் மட்டும் ஒத்துழைக்கவில்லை.

“வேண்டாம் வேண்டாம்!” என்று மறுத்துவிட்டு
“வேண்டும் வேண்டும்!” என்றோம் நவம்பரில்.

SUB ZERO TEMPERATURE என்றவுடனே
சப்த நாடியும் அடங்கி விட்டது இருவருக்கும்!

விடவும் மனம் இல்லை! போகவும் துணிவில்லை!
விட்டால் இன்னமும் வயது கூடும் அல்லவா?

இறுதியில் வென்றது கூழ் தான்! மீசை அல்ல!
உறுதியுடன் குளிரை சமாளித்துச் சென்று வந்தோம்.

ஊதல் காற்று என்று ஏன் பெயர் தெரியுமா?
ஊதல் சப்தம் கேட்கிறது அது வீசும் போது!

உடலைத் துளைத்து, எலும்பைத் துளைத்து
உடையையும் துளைக்கும் வல்லமை வாய்ந்தது!

கார்கள் எல்லாம் frost icing உடன் நின்றன
காலையில் கலர்ஃ புல் கேக்குகளாக மாறி!

சிகரெட் இல்லாமலேயே புகை விட்டோம்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும்!

விரல் நுனிகள் மட்டும் ஐஸ் கட்டிகள் ஆயின.
விரல் நுனிகளில் ரத்த ஓட்டம் குறைவு தானே!


#158. சிரிப்பு எங்கே போனது?

மூன்று மாதக் குழந்தையுடன் முழுதாக
மூன்று மாதங்கள் தங்கி விட்டு வந்தால்

என்ன என்ன மாறுபடும்? எது வேறுபடும்?
மின்னும் சிரிப்பு மறைந்து விடும் முதலில்!

எண்ணவே என்னவோ செய்யும் அடுத்தது!
கண்ணனுக்கும் கூட அது போலவே தான்!

கண்கள் விரியக் கன்னம் குழியச் சிரிக்கும்
கண் திருஷ்டிபடும் சிரிப்பு எங்கே போனது?


#159. Restaurant style!

நாக்குச் செத்துக் கிடப்பவர்களுக்கு
நம்ம ஊர் சமையல் ரொம்பப் பிடிக்கும்!

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
என்று அழைப்பர் நண்பர்களை விருந்துக்கு!

எல்லாமே restaurant ஸ்டைல் தான் அப்போது.
எல்லோரும் உண்பதும் அப்போது unlimited food!

அப்படித் தானே விளம்பரம் செய்கிறார்கள் இங்கு!
unlimited masal dosa – one of the top ten food !

இதிலும் கூடவா அந்த டாப் டென் வரிசை???
எதிலும் அது இருக்கும் போலத் தோன்றுகிறது.

முதலில் தொடங்கிய அந்த restaurant ஸ்டைல்
முடிவு வரையிலும் தொடருவது உண்மைதான்!

எல்லோரும் உண்ட பிளேட்டை வைத்துவிட்டு
செல்வார்கள் ஸ்டைலாக எழுந்து நடந்து.

Restaurant என்றால் செக்கும், மேலே டிப்சும்
மறக்காமல் வைத்துவிட்டுப் போவர்கள்!

மறந்து விடுவார்கள் இங்கே செக்கும் டிப்சும்.
மறக்காமல் இங்கே விடுவது plate மட்டுமே!

‘மகன் எடுக்கக் கூடாது’ என நான் முந்திக் கொள்ள
மகன் ‘நான் எடுக்கக்கூடாது’ என்று வந்து முந்த

பெண்களின் புத்தி பின்புத்தியாக வேலை செய்து
பெண்களே பின் எடுத்தார்கள் தட்டுக்களை.

அன்பினால் செய்கின்றோம் நாம் நம்முடைய
உடல் சக்திக்கு மீறிய கடின வேலைகளை.

துன்பம் விளைகிறது மனதில் அதே அன்பு
உண்பவர்கள் மனதில் இல்லாது போனால்.


#160. Unlimited craze!

Unlimited என்று உற்சாகமாக
உள்ளே தள்ளுவதன் பலன்…

ஸ்மால், மீடியம், லார்ஜ் மாறி
XL, XXL, XXXL என்றாகிவிட்டது!

உணவு unlimited ஆனாலும்
உடலும், இதயமும் limited!!!

கால்கள் எத்தனை பளு தாங்கும்?
கால்வரை ரத்தம் பாய்ந்து செல்ல

எப்படித் துடிக்கும் இதயம் என்று
என்றாவது சிந்திக்க வேண்டாமா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *