#21. REAL LIFE PARTNERS!!!
சில வியாதிகள் வரும்போது
லைஃப் டைம் contract உடன் வரும்.
நாம் இருக்கும் வரையில் அதுவும்
நம்முடன் இணைபிரியாது தொடரும்.
கூட நான்கு நண்பர்களையும்
தவறாமல் அழைத்து வரும்.
“The more the merrier” அல்லவா ?
“கால்வலி எப்படி இருக்கிறது?” என்றால்
“பழகிப் போய் விட்டது!” என்பது பதில்.
What cannot be cured must be endured!
என்பது எவ்வளவு உண்மை!
#22. Morargin.
அது ஊரோடு எல்லோரும் urine புகழ் பாடிய காலம்.
சர்வரோக நிவாரணி போல ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது.
உள்ளே குடிக்க, பூசிக்கொள்ள, தடவிக்கொள்ள என்று.
விடிகாலையில் வருவது பெஸ்ட் சாம்பிள் என்றார்கள்.
மூக்கைப் பிடித்துக் கொண்டால் கூட
நிச்சயமாகக் குடிக்க முடியாது அதை.
மாடு வாலைத் தூக்கும் முன்பே சிலர்
சொம்புடன் சென்று தயாராக நிற்பார்கள்.
இனி எல்லோரும் பாட்டிலில் சேகரித்து
Recycle செய்வார்களோ என்று தோன்றியது.
அன்று மனதில் உதித்த பெயர் தான் Morargin!
அன்று நாங்கள் ஐந்து பேரும் சிரித்தது போல
என்றாவது சிரித்திருப்போமா தெரியாது.
அப்பாவுக்கும் அந்தப்பெயர் பிடித்திருந்தது.
அடிக்கடிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.
Urine recycle செய்து அதன் மூலம்
உடல் நலம் பெற்றோமோ இல்லையோ
சிரித்துத் சிரித்தே உடல் நலம் பெற்றிருப்போம்.
#23. கடவுள்.
அலகில்லா விளையாட்டுடையான் = கடவுள்.
குழந்தை ஏன் மணல் வீடு கட்டுகின்றது ?
ஏன் அதை வைத்து நிஜவீடு போல் விளையாடுகிறது?
ஏன் அதை உதைத்துத் தள்ளிவிட்டு போகின்றது ?
அதனால் அதற்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்?
ஒரு லாபமும் இல்லை, ஒரு நஷ்டமும் இல்லை.
அது குழந்தைக்கு ஒரு பொழுது போக்கு.
ஒரு விளையாட்டு. ஒரு டைம் பாஸ்.
கடவுளைப் பொறுத்தவரையில் நாம்
வெறும் மணல் துகள்கள் தாம்.
அவன் பொழுது போக்க நம்மை வைத்து
விளையாடுகின்றான். அவ்வளவே!
போர் அடித்தால் உதைத்துத் தள்ளிவிட்டு
இன்னும் ஒரு புது வீடு மீண்டும் கட்டுவான்!
#24. இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்???
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு வெட்கத்துடன்
எங்கோ இருக்கும் காதலனிடம் பேசும் கல்லூரி மாணவி;
மறந்து போன instructions கையை ஆட்டியபடி
யாருக்கோ விவரமாகச் சொல்லும் working – woman;
ஓடி வந்து பஸ் ஏறும்போதும்
பேசிக்கொண்டே வரும் வாலிபன்;
தியேட்டரில் படம் பார்க்காமல்
காதலியின் புகைப்படத்தைப் பார்த்து பார்த்து
புளகம் அடையும் கல்லூரி இளவட்டம்;
நேரத்தை வீணாக்காமல் பல வேலைகளை சாதிக்கும்
இளைய தலைமுறையின் துருதுரு executive ;
டிரைவ் செய்து கொண்டே பேட்டி அளிக்கும்
நட்சத்திர நாயக, நாயகியர்கள்;
ஓரக் கண்ணால் “அப்பா வருகிறாரா?” என்று
நோட்டம் இட்டுக் கொண்டே, பால்கனியில் நின்று
அரை மணி அரட்டை அடிக்கும் பெண்ணும்;
“வீட்டில் நுழைந்தால் அம்மாவின் பாம்புச் செவிக்கு
எதுவுமே தப்பாது!” என்று பைக்கில் இருந்து
இறங்கியதுமே, அடுத்த conquest பற்றி
பிளான் செய்யும் லோக்கல் ஹீரோவும்;
“கணவன் எங்கே திரிகிறான்?” என்று கண்டு பிடிக்க
ஆபீஸ் நம்பருக்கு போன் செய்யும் மனைவியும்;
“மனைவி வீட்டில் இருக்கிறாளா அல்லது ஷாப்பிங் /
சினிமா/ லேடீஸ் கிளப் சென்று விட்டாளா?” என்று
துப்பறிய random ஆக போன் செய்யும் கணவனும்;
இவர்கள் எல்லோரும் செல்போன் வரும் முன்பு
என்ன செய்துகொண்டிருந்தார்கள்???
#25. ஆள் பாதி ஆடை பாதி
ஆள் பாதி ஆடை பாதி உண்மையே!
“ஆள்” உடலுக்கு உள்ளே இருக்கிறான்.
ஆடை உடலுக்கு வெளியே இருக்கிறது!
உள்ளே இருக்கும் “ஆளை”த் தேடாமல்,
வெளியே அணிந்து இருக்கும் ஆடையில்
வீணான நாட்டமும், தேடலும் ஏன்???