#71. மணமகளைத் தேர்வு செய்யும் போது
மாமியார் கவனிக்கவேண்டியவை இவை!
1. குடும்பத்துக்கு ஏற்ற அழகு.
2. இனிய மொழி பேசும் இயல்பு.
3. சிடுமூஞ்சித்தனம் இன்மை
4. கோபம் இன்மை
5 . நோய் நொடிகள் இல்லாத பரம்பரை(!)
6. மாமனார் மாமியார்களை “ராகு, கேது”
என்று பெயர் இட்டு மிதிக்காமல், மதிக்கும் பாங்கு.
7. இன்முகத்துடன் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை.
8. கணவன் வார்தைகளைக் கேட்டு நடக்கும் பண்பு.
ஒரு பெண்ணாவது இதில் தேறுவாளா
இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்….?
#72. இது எப்படி இருக்கு???
மனம் ஒரு குரங்கு!
சைக்கிளில் போகின்றவன் யாரைப் பார்த்துப்
பொறாமைப் படுவான் தெரியுமா?
படகுக் காரில் போகின்றவரைப் பார்த்து….இல்லவே இல்லை
லகரம் பெறும் மோட்டார் சைக்கிளில் செல்பவரைப் பார்த்து…..இல்லவே இல்லை
கால் டாக்சி / ஆட்டோவில் போகின்றவரைப் பார்த்து….இல்லவே இல்லை
அவன் பொறாமைப் படுவது தன் சைக்கிளைக் காட்டிலும்
விலை உயர்ந்த சைக்கிளில் செல்பவனைப் பார்த்துத்தான்.
#73. இது எப்படி இருக்கு???
புலி வேஷம்!!!
அப்பா அடிக்கடி சொல்லுவார்,
“வீட்டில் யாருக்காவது புலி வேஷம் போட்டு வைக்க வேண்டும்.”
எல்லோருமே soft ஆகவும், ஸ்வீட் ஆகவும் இருந்தால்
பல சிக்கல்களில் மாட்டிக் கொள்வோம்.
“முக மாட்டம்” என்பார்கள் தெலுங்கில்.
“தாட்சண்யம் பார்ப்பது” என்பார்கள் தமிழில்.
பல சமயங்களில் இக்கட்டில் இருந்து தப்பிக்க ஒரே வழி,
வீட்டில் அந்த நபருடன் அதிகம் பழக்கம் இல்லாத ஒருவருக்குப்
புலி வேஷம் போட்டு வைப்பது தான்!
” ஐயோ அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது!”
“அவருக்குக் கண் மண் தெரியாமல் கோபம் வரும்!”
அவருக்குப் பதில் சொல்ல என்னால் முடியாது”
இத்யாதி வசனங்கள் உபயோகிக்க உதவும்!!!
கணவர் மனைவிக்குப் புலி வேஷம் போட்டால்
“அவருக்கு” பதில் “அவளுக்கு” என்றால் போதும்.
#74. இது எப்படி இருக்கு???
கோவில் பூசாரிமாமா ஒரே ஒரு வாக்கியத்தில்
என் பல பிரச்சனைகளை அடக்கி விட்டார்.
“வயதிற்கும் மதிப்புக் கொடுக்காத,
கல்வி கலைகளின் மதிப்பை அறியாத
ஒரு காட்டு மிராண்டிக் கூட்டத்தில்
மாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்! பாவம்!!”
#75. இது எப்படி இருக்கு?
தேங்காயை, ஒரு நாள் போலவே கிட்சன் ட்ரைனிங் போர்டில்
உடைக்கும் ஒரு பெண்ணிடம் கேட்டேன்,
“ஒரு இரும்புத் துண்டை உபயோகிக்கக் கூடாதா???
வீடு பாழாகிவிடுமே!”
“ஊம்! வாடகை எதுக்குக் குடுக்கறோமாம்?”
வாடகை வீட்டில் வசிப்பதற்கா???
வீட்டை முடிந்த அளவுக்கு உடைப்பதற்கா???
குடிக்கூலியா??? உடைக்கூலியா???