#91. எப்படி இதை மட்டும் மறந்து போனேன்???
ழகரம் தமிழின் சிறப்பு.
ழகரம் கவியின் சிறப்புக் கூட!
ழாசு கவி = ழீசு கவி = ழூசு கவி = ழேசு கவி = ழைசு கவி = ழௌசு கவி.
பெங்களூரில் தண்ணீரில் “மிதக்கும் போது” (மூழ்கும்போது???)
இவர் கவிதை ஊற்று மடை திறப்பதனால் இவை யாவும் ஒன்றே!
#92. இது எப்படி இருக்கு?
அவர் pun செய்வதில் மிகவும் வல்லவர்.
சிரிக்காமல் சொல்லுவதால் நமக்குச்
சிரிப்பு பொத்துக் கொண்டுவரும்.
வெய்யிலில் வீட்டுக்கு வந்த நண்பரிடம்
“தண்ணீர் குடிக்கறேளா?” என்று மனைவி கேட்க,
நாங்க எல்லாம் தண்ணி சாப்பிடுவோம்.
தண்ணி குடிக்கமாடோம்!” என்றார்.
#93. இது எப்படி இருக்கு???
அறுபதாம் கல்யாண விழாவுக்கு வந்துவிட்டு
விட்டேற்றியாகச் சுற்றியவர்கள்,
புது உடை கொடுத்தவுடன்
போட்டி போட்டுக் கொண்டு நமஸ்காரம் செய்தார்கள்.
#94. இது எப்படி இருக்கு???
புடவையின் விலைச் சீட்டை எடுக்காமலேயே
சிலர் பரிசு கொடுக்கின்றார்கள் ஏன் தெரியுமா?
அதை பார்க்காவிட்டால் அது அவ்வளவு விலை உயர்ந்து என்று
சத்தியம் செய்தால் கூட நாம் நம்ப மாட்டோம்!
#95. இது எப்படி இருக்கு???
பிடிக்காத கலரைப் புடவையைப்
பெண்கள் தொட மாட்டார்கள் என்று
பேர் பேராக பிடித்த கலர் கேட்டு
பட்டு புடவைகள் வாங்கித் தந்தால்
“நானூறு ரூபாய்க்கு இதே போல்
எதிர் வீட்டுக்காரி வாங்கினாள்”
என்று சொல்லி நம்மை
உடைந்த பலூன் ஆக்கி
வெறுப்பேற்றுவார்கள்!!!