சிங்காரச் சென்னையின் செந்தமிழ் அகராதி .
சென்னைவாசியான தங்கை திருமதி ராஜி ராம்
அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.
1. வெறுமே = ஒன்றும் செய்யாமல்.
2. சும்மனாச்சிக்கும் = பொய்யாக.
3. தேமேன்னு = (தெய்வமே என்று) அமைதியாக.
4. உம்மாச்சி = கடவுள்.
5. ஆப்ட்டுகினான் = மாட்டிக் கொண்டான்!
6. வேணுங்காட்டியும் = வேண்டுமென்றே.
7. ஈஸ்துகினு = இழுத்துக்கொண்டு.
8. டபாய்க்கிறது = ஏமாற்றுவது / நழுவுவது.
9. குந்தினான் = அமர்ந்தான்.
10. இக்குது = இருக்கிறது.
11. ஸோம்மா = சும்மா.
12. க்கீதா = இருக்கின்றதா?
13. தாவல = தேவலை.
14. கண்ணாளம் = கல்யாணம்.
15. பச்சத்தண்ணி = குளிர்ந்த நீர்.
16. வென்னித்தண்ணி = சுடு நீர்.
17. தத்தூண்டு = சிறிதளவு.
18. காலங்காத்தால = விடியற்காலையில்
19. தில்லிக்கேணி =திருவல்லிக்கேணி.
20. தாரவாத்தான் = தானம் செய்துவிட்டான்.
21. டின்னுக்கட்டினான் = அடித்தான்.
22. பொம்மனாட்டி = பெண்.
23. போவயில = போகும்பொழுது.
24. வந்துக்கினு = வந்துகொண்டே.
25. வாரயில = வரும் பொழுது.
26. போய்க்கினு = போய்க்கொண்டே.
27. கந்தரகோளம் = குழப்பம்.
28. வாக்கப்பட்டு = வாழ்க்கைப்பட்டு.
29. விடியங்காட்டியும் = பொழுது விடிந்தவுடன்.
30. தொந்தரோ = தொந்திரவு.
31. அதுகள் = அவர்கள்.
32. வாங்கிக்கினு = வாங்கிக் கொண்டு.
33. தண்ணிக்கொளாய் = தண்ணீர்க் குழாய்.
34. மச்சான் = கணவன்,
35. வச்சிட்டு = வைத்துக்கொண்டு.
36. வந்திட்டு = வந்துகொண்டு.
37. அந்தாண்ட = அந்தப் பக்கமாக.
38. கெய்வன் = கிழவன்.
39. கெய்வி = கிழவி.
40. சாவுகிராக்கி = சாகப் போகிறவன்.
41. கௌரதை = கௌரவம்.
42. ஊடு = வீடு.
43. ஊட்லே = வீட்டிற்குள்ளே.
44. இன்னாமே = என்ன அம்மா?
45. இன்னாயா = என்ன ஐயா?
46. ஒரு தபா = ஒரு தடவை.
47. சோமாறி = சோம்பேறி.
48. முடிச்சமுக்கி = திருடன்.
49. ரோதனை = தொந்திரவு.
50. பெருஸு = வயதானவர்.
51. துண்ணு = தின்னு.
52. நாஸ்டா = பலகாரம்.
53. பொரை = காய்ந்த bun போன்றது.
54. பிஸ்கோத்து = பிஸ்கட்.
55. இன்னாங்கரே = என்ன சொல்கின்றாய்?
56. சோத்தாங்கை = வலக்கை.
57. பீச்சாங்கை = இடக்கை.
58. கொளம்பு = குழம்பு.
59. வெரசையா = விரைவாக.
60. அளுகாதே = அழாதே
61. அளுவுறே = அழுகின்றாய்.
62. புள்ளே = பெண்ணே!
63. புரோட்டா = பரோட்டா.
64. சீல = சேலை.
65. வேட்டி = வேஷ்டி.
66. அப்பால = பிறகு.
67. வாயப்பயம் = வாழைப்பழம்.
68.கெய்க்க = கிழக்கே.
69.பொய்க்க = பிழைக்க.
70. மய்க்கி = மழைக்கு.
71. பிரிஞ்சி = பிரியாணி.
72. எம்மாஞ்சைஸு = எவ்வளவு பெரியது.
73. இம்மாஞ்சைஸு = இவ்வளவு பெரியது.
73. கூவுறே = சத்தம் போடுகிறாய்.
74. அவங்கைல = அவனிடம்.
75. வலி = இழு.
76. ஒத்து = விலகு.
77. டப்பாசு = பட்டாசு.
78. பயாஸ்கோப்பு = திரைப்படம்.
79. நன்னி = நன்றி.
80. படா பேஜாரு = பெரிய துன்பம்.
81. பொரளி = புரளி.
82. கிக்கு = போதை.
83. சரக்கு = பொருள்.
84. அய்கு = அழகு.
85. வுட்ரா = விடுடா.
86. ஒதிக்கறே = உதைக்கிறாய்.
87. ஒயுங்கா = ஒழுங்காக.
88. வவுறு = வயிறு.
89. கவுறு = கயிறு.
90. கய்தே = கழுதை
91. பொய்து = பொழுது.
92. செரமொ= சிரமம்.
93. காபித்தண்ணி = காபி.
94. டீத்தண்ணி = டீ.
95. பொஸ்தகம் = புத்தகம்.
96. வாத்யாரு = தலைவர்.
97. ஸோக்கு = நாகரிகம்.
98. ஜகா வாங்கு = அந்தப்பக்கம் போ.
99. பக்கிரி = பொல்லாதவன்.
100. ஜெபி = சட்டைப் பை
101. ரப்பீஸ் = கட்டிடம் இடித்த துகள்
102. பய்ட்டு = வாளி (bucket).
103. அண்ணாத்த = அண்ணன்.
104. ஸர்தா(ன்) = சரிதான்.
105. கல்லீஜ்ஜு = அழுக்கு.
106. அப்பால = அப்புறம்.
107. காவா = கால்வாய்.
108. அடவு = அடகு.
109. கீஸிடு = கிழித்துவிடு.
110. இட்டுக்கினு = அழைத்துக்கொண்டு.
111. இட்டாந்தே(ன்) = அழைத்து வந்தேன்,
112. டவுசரு = காற்சட்டை (pant)
113. நிஜாரு = காற்சட்டை (pant)
114. இஸ்பீடு = வேகம்.
115. கம்முனு கெட = பேசாமல் இரு.
116. ஆப்ரிச(ன்) = அறுவை சிகிச்சை.
117. பேசாத போவியா = பேசாமல் போவாயா.
118. இஸ்கூலு = பள்ளிக்கூடம்.
119. பாயாசம் = பாயசம்.
120. பெனாத்து = உளறு
121. கொல்துக்கார் = கொத்தனார்
122. வுய்து = விழுகிறது
123. பூட்டா(ன்) = போய்விட்டான்
124. புட்டுக்கிச்சு = இறந்துவிட்டார்
125. பிச்சாத்து = கேவலமான
126. நாயம் = நியாயம்
127. ரீல் உட்டா(ன்) = பொய் சொன்னான்
128. டுபாக்கூரு = ஏமாற்றுக்காரன்
129. துட்டு = பணம்
130. ஃபீலு ஆனா(ன்) = வருந்தினான்